
என்னோடு நான்
ஒரு பயணம்
அது என்னைப்பற்றி நான்
அலசும் தருணம்
அங்கு நானே, நான்
படிக்கும் புத்தகம்
கடிகாரம் மெல்ல நகரும்
மயக்கமெல்லாம் கலையும்
தயக்கம் எல்லாம் தளரும்
தன்னம்பிக்கை மேலும் வளரும்
புது வழி, அதற்கான வரைபடம்
ஒன்று தெரியும்
இறுதியில் நீ தான் நான்
நான் தான் நீ
என்பது புரியும்
உன்னோடு நீ செய்யும் பயணம்
அது எப்படி ?