
*வாசிப்பை நேசிப்போம்*
*நூல் : தோழர்கள்*
*நூலாசிரியர்: கி.ரமேஷ்*
*பதிப்பாளர் : கிழக்கு பதிப்பகம்*
கம்யூனிசம் என்றால் என்ன? என்பதை அதன் கோட்பாடுகளை உறுதியாக தன் வாழ்க்கையில் கடைபிடித்து மக்களிடம் கொண்டு சென்ற சில அரிய தலைவர்களின் வாழ்வுமுறை மற்றும் ஆற்றிய களப்பணிகள் மூலமும் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.
மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து எவ்வாறு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொல்லிலும் செயலிலும் வேறுபடுகிறார்கள் என்பதை சிங்காரவேலர்,ஜீவா, அமீர் ஹைதர் கான்,ஹாக்கிஷன் சிங் சுஜித், என். சங்கர் ஐயா, கோதாவரி பருலேகர், ஷாம்ராவ் பருலேகர், பி .ராமமூர்த்தி, இ எம் எஸ் நம்பூதிரிபாட், பி சினிவாச ராவ் ஆகியோரின் போராட்ட வாழ்வு சமூக மற்றும் அரசியல் பங்களிப்பு மூலம் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஒரே விஷயம் தெளிவாகப் புரிகிறது
மற்ற அரசியல் கட்சிகளில் சாதாரண மனிதர்கள் செல்வந்தர்களாக மாறுகிறார்கள் ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மட்டும் செல்வந்தர்கள் சாதாரண மனிதர்களாக மாறிவிடுகிறாரர்கள்