
*என்னைச்சுற்றி சிறகுகள்*
*நூலாசிரியர்: ஆவிச்சி*
*பதிப்பாளர் : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்*
நூல்கள் பல படித்து, பிறர் அனுபவங்களை நமதாக்கிக் கொள்வது என்பது ஒரு உன்னத செயலாகும். அத்தகைய உன்னதமான அனுபவத்தைத் தருகிறது இந்நூல்.
நூலாசிரியர் அவர் பார்த்த, பழகிய, வியந்த மனிதர்களைப் பற்றியும், அவர் படித்த பள்ளி கல்லூரிகளில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும், தனது ஊரைப் பற்றியும், அவர் வாழ்க்கையை மாற்றிய சில தருணங்களைப் பற்றியும் மிக வெளிப்படையாகவும், நேர்த்தியாகவும் எழுதியுள்ளார். அதையெல்லாம் படிக்கும்போது நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க வைத்து, நம் வாழ்வை அசை போட்டு, புது புரிதல்களையும் தெளிவுகளையும் நமக்கு அளிக்கிறது.
உங்கள் வெற்றிக்கான இலக்குகளை நீங்கள் அடைய நிச்சயம் இந்த அனுபவங்கள் உங்களை விரைவுபடுத்தும்.