
வாசிப்பை நேசிப்போம்
புத்தகம் :
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்
நூலாசிரியர்
மதுரை நம்பி
பதிப்பாளர்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் சென்னை
இந்த நூல் ஒரு சிறைக் காவலரின் அனுபவத் தொகுப்பு. அவர் சிறைக்குள் சந்தித்த பல்வேறு வகையான மனிதர்களின் குணாதிசயங்கள், சிறைக்குள் அவர்களுடைய வாழ்வுமுறை மற்றும் அவர்களுடைய எண்ண ஓட்டங்களைப் பற்றி மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.
தூக்கு மேடை ஏறும் கைதிகளின் கடைசி நிமிடங்கள், படுகொலைகள் செய்து சிறைக்கு வந்த கைதிகளின் மற்றொரு பக்கம், களவு செய்தாலும் அதில் சில தர்மங்களை கடைப்பிடிக்கும் சில கைதிகளின் கொள்கைகள் இதையெல்லாம் அவர் பதிவு செய்துள்ள விதம் ஒருவித்தியாசமான பார்வையை நமக்குத் தருகிறது
தமிழகத்தையே ஒரு காலத்தில் உலுக்கிய மலையூர் மம்மட்டியான், சீவலப்பேரி பாண்டி, தீச்சட்டி கோவிந்தன், ஆட்டோ சங்கர் போன்றவர்களைப் பற்றி பெரும்பாலும் பலர் அறியாத நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
பல சரித்திர கதை சொல்லும் சிறைக் கதவைத் திறந்து பார்ப்பதற்கு நல்லதொரு புத்தகம் இது. சில பக்கங்கள் பயமுறுத்துகிறது, சில பக்கங்கள் உணர்ச்சி வசப்பட வைக்கிறது பல பக்கங்கள் சிந்திக்க வைக்கிறது.