
விரட்டினார்கள்
இடம் கிடைத்தது!
கல் எறிந்தார்கள்
வீடானது!
தீ வைத்தார்கள்
வெளிச்சம் வந்தது…..
வேல் பாய்ச்சினார்கள்
வேலி ஆனது!
விஷம் தந்தார்கள்….
அன்றுமுதல் நான்
திருநீலகண்டன் !
புத்தகத்தின் பின்னட்டையில் இக்கவிதையைப் பார்த்தவுடன் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. ஆம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா ?
யார்கண்ணன் யார் ? என்று அறிந்தேன்.
அவர் வாழ்க்கையின் சில அனுபவங்கள், அவர் ஆழ்ந்த சிந்தனையின் சில பார்வைகள், அவர் உழைப்பின் வேர்வை, அவர் எண்ணங்களின் நேர்மை, அவர் பரந்த வாசிப்பின் மகிமை இதையெல்லாம் கொண்டதுதான் இப்புத்தகம்.
இதில் இவர் விவரித்துள்ள பல சம்பவங்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பாக
திரு டி வி எஸ் அய்யங்கார் எவ்வாறு ஜெனரல் மோட்டோரின் பிரதிநிதிகளை அசத்தி அவர்களின் கூட்டும் ஒத்துழைப்பையும் பெற்றார் என்ற விவரமும்
ஒரு கவியரங்கத்திற்குத் தலைமை ஏற்க வந்த கவிக்கோ அப்துல் ரகுமான் எவ்வாறு தன் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுத்து யார்கண்ணனின் வலியைப் போக்கி, ஊக்குவித்தார் என்ற செய்தியும் என்னை வெகுவாக பாதித்தது, நீண்ட நேரம் சிந்திக்க வைத்தது.
யார்கண்ணனின் அனுபவங்களைப் படித்து, உள்வாங்கி நமதாக்கிக்கொண்டு நிச்சயம் பயனடையலாம்.
வாசிக்க வேண்டிய புத்தகம்.
படித்தேன் சிந்திக்க வைத்தது.
ப இராசேந்திரன்