
இந்த ஏவுகணை
ஏது இதற்கு ஈடு இணை ?
அறிவியலை வென்று
உலகிற்குத் தன்னை
அறிமுகப் படுத்தியவன்
தான் பிறந்த மண்ணை பெருமைப்படுத்தியவன்
தமிழ் குடிமகன்
பின் முதல் குடிமகன்
மறைந்தும்
அனைவர் மனதிலும்
குடியிருப்பவன்
ஒருமுறை வந்தால் கனவு
இரு முறை வந்தால் ஆசை
பலமுறை வந்தால் அது இலட்சியம்
என்று பலமுறை சொன்னவன்
தன் இலட்சியத்தில் நின்று வென்றவன்
அவன் மறைந்து ஆனது ஏழு ஆண்டு
இள நெஞ்சங்களில்
அவன் விதைத்த விதைகள்
செழித்தெழுந்து காக்கும் இவ்வுலகைப் பல்லாயிரம் ஆண்டு