
மலர்ந்த மலர்கள்
இறந்த பின்னும்
சிறந்து நின்று
அழகு சேர்க்க
அதைப் பார்த்து
என்னுடைய இந்நாள் தொடங்க
மலர்ந்தது என் நெஞ்சம்
நேர்மறை எண்ணங்களுக்கு
இனி இல்லை இன்று பஞ்சம்
தினம் மலர் சேர்த்து,
அழகாக்கிக்காட்டும் தங்கை
இன்று இவ்வுலகை
“ஒரு கைப்பார்ப்போம்”
என்று சக்தி ஊட்டும் நம்பிக்கை.