
பரந்து விரிந்து இருக்கின்றாய்
மூன்றில் இரு பங்காய் நிற்கின்றாய்
கண்டங்களை இணைக்கின்றாய்
சில சமயம் சுனாமியாய்
விஸ்வரூபம் எடுக்கின்றாய்
கடலே
உன் நடுவே இருக்கும்போது
“நான்” என்ற என் உணர்வு நாணுகிறது
தெரிகிறது
நான் அதில் உள்ள “ன” மேலுள்ள
புள்ளியில் ஒரு சிறு துளிதானெனப் புரிகிறது
நான் நாமாக மாறுகிறது.