
முடியுமென்று உன்னை நம்பு
உன்மேல் நீ வை அன்பு
இன்னல்களை எதிர்த்து நீ எய்தும் அம்பு
தன்னம்பிக்கை தருமே அதற்குத் தெம்பு
ஆழமாகச் சிந்தித்து விடு முன்பு
செயலில் இறங்கிவிட்டால் நிறுத்தாதே பின்பு
செயல் முடிக்கும் திறன் நல்ல பண்பு
நீ சொல்லுகிறபடி உன் செயல் அமைந்தால் அது தருமே
உனக்கு மாண்பு