
துக்கம் கரையும் நேரம்
மறையும் மன பாரம்
கவலைகள் இளைப்பாறும்
இருந்தும் இல்லாதவனாய்
எல்லாம் மறந்து
இவ்வுலகைத் துறந்து
“நான்” என்றதை இழந்திருக்கும் நேரம்
அமைதியே அமைதியில் இருக்கும்
எண்ணங்கள் மாய்ந்து போகும்
இருள் வெளிச்சத்தை வெல்லும்
சுவாசிக்கும் காற்று மட்டும்
நம்முள் சென்று சென்று திரும்பும்
இவ்வுலகின் துக்கங்கள் வெல்ல முடியாத ஒன்று தூக்கம்