
கண் விழித்துப் பார்த்தேன்
இரவது முடியும் நேரம்
வெகுதூரத்தில் ஒரு சேவல் கூவ
பறவைகளின் இனிய சத்தம்
அமைதியை கலைத்தது மெதுவே
இருளை வெளிச்சம் துரத்த
என் தூக்கத்தை வென்று
எழுந்தேன்
புதிதாய் பிறந்த நாளை
வரவேற்கும் விடியற்காலை
புத்துணர்ச்சி நிரம்பியது என்னுள்
இன்று
ஒவ்வொரு கணமும் வாழ்வேன்
என் கனவுகள் நனவாகும் திருநாள்
வரும் காலங்களை நிர்ணயிக்கும் பெருநாள்