
கடல் நீர் வந்து முத்தமிடும் நித்தம்
அது எழுப்பும் ஒலியோ அழகிய சந்தம்
அதைத் தவிர இல்லை அங்கு வேறேதும் சத்தம்
நிறைய வளர்ந்த தென்னைகள்
கொண்ட நில அமைப்போ ஒரு திண்ணை
தென்னையே குடையாய்
அதன் கீழ் சதுர மேஜை, நாற்காலிகள்
அங்கே இளைப்பாறும்
நம் உழைப்பாளி (முதலாளி )
ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் வருவார்
பலருக்கு புதுக் கட்டிடங்கள் கட்டித் தருவார்