
கிளியும் வரும்
குயிலும் வரும்
காகமும் வரும்
வேறு சில பறவைகளும் வரும்
எல்லாம் வந்து இம்மரத்தில் அமரும்
வேறுபாடு பார்ப்பதில்லை மரம்
அனைத்துக்கும் பொதுவாய் நிற்கிறது
தென்றல் பட மெதுவாய் அசைகிறது
அதன் அருகே நிற்கின்றேன் அதன் பண்பை நேசிக்கிறேன் அதன் காற்றைச் சுவாசிக்கிறேன்
நான் ஏன் அதுபோல் இல்லை ? ‘ என்று யோசிக்கிறேன் அந்நற்பண்பைப் பெற யாசிக்கிறேன்
மரம் தருமா வரம் ?