
உலகளவு அறிவு வேண்டும்
இமயமலை அளவுக்கு
அனுபவங்கள் வேண்டும்
கடல் ஆழம் அளவுக்கு என்னுள்
நான் செல்ல வேண்டும்
என்னை நான் அறிய வேண்டும்
கடவுள் இருந்தால் அவரைக் கண்டு
கைகுலுக்க வேண்டும்
அவர் அளவுக்கு ஆயுள் வேண்டும்
மின்சாரத்தின் சக்தி வேண்டும்
பிறருக்கு உதவப் பெருஞ்செல்வம் வேண்டும்
கடையேழு வள்ளல்களுக்கு நான் கொடுக்க வேண்டும்
இப்போது இக்கனவு கலைய
நான் எழ வேண்டும்.
எப்போதும் இக்கனவு நினைவாக
நான் உழைக்கவேண்டும்.