
கரைவேட்டிகள்
நிறைய உண்டு
கறை படியாதவர்களை,
வெகு நாளாயிற்று கண்டு
எங்கும் எதிலும் ஊழல்
இன்றைய அரசியல் சூழல்
ஓட்டுக்குப் பணம் பேசி
மக்களுக்கு வலை வீசி
பதவிக்கு வருவது கிரேசி
போட்ட முதலீடு பல மடங்காகும்
பதவியில் இருக்கும் வரை
வண்டி ஜோராக ஓடும்
பின்பு வேகம் குறையும்
வாய்ப்பு கிடைத்தால்
தேர்தல் களத்தில்
மறுமுறையும்
ஓட்டுக்கு விலைபேசி
மக்களுக்கு வலைவீசி
திரும்பவும் முதலீடு
மக்களின் அரசங்கம் தான்
மக்களால் தான்
மக்களுக்காகத்தான்
இருந்தும்
ஆளும் கட்சி என்றால்
முதலீடு அது ஆகும் பலமடங்கு
எதிர்க்கட்சி என்றால்
முதலீடு அது ஆகும் சிலமடங்கு
வாய்ப்பளிக்கும்
ஜனநாயகத்துக்கு நன்றி!