
தனிமை
நாமாக அதை நாடினால் பெருமை
தாமாக வந்தால் அது சுமை
தனிமை
நம்மை நாம் அரிய உதவினால் அது இனிமை
நம்மைக் காயப்படுத்தினால் அது கொடுமை
தனிமை
அதனால் தான் அறிய முடியும் நம்மை
அது இல்லையேல்என்றுமே நாம் அடிமை
வேண்டும் தனிமை
தரட்டும் அது இனிமை
உணர்வோம் நம் முழுமை
அதுதான் நம் முதற்க் கடமை