
இரு வழிச்சாலை
போவோர்க்கு ஒரு வழி
வருவோர்க்கு ஒரு வழி
என் விழியால் கண்டேன்
போகிற வழியில்
வந்தான் ஒருவன்
குறுக்கு வழியில்
தன் இலக்கை அடைய
போகிற போக்கில் வாகனம் ஒன்று
அவனைக் காணத் தவறி
முத்தம் செய்ய
ஒரு பெரும் சத்தம் கேட்க
ஒரு நொடிப் பொழுதில்
அனைத்தையும் இழந்தான்
போய்ச் சேர்ந்தான்
எமனைத் தானாய் அழைத்து
நேர்வழி இருக்க
குறுக்குவழி எதற்கு ?