சிரித்தார் பெரியார்

கலைவண்ணம் கொண்ட
இறைவனின் வீடு
வேறு எங்கும் இல்லை
இதற்கு ஈடு

சோழ மாமன்னனின்
அற்புத படைப்பு
ஆயிரம் ஆண்டுகள் தாண்டி
நிற்கும் வியப்பு

ஊர் காக்கும் தெய்வம்
வீட்டுக்காவலில் உள்ளே

ஏன் சிறை வைத்தான் சோழன் ?
என்னைச் சிந்திக்க வைத்தான்

வெளியே பெரும் நந்தி காவல் இருக்க
மெல்ல முந்தி சென்றேன் உள்ளே
சிவனென் என்று ஒருவர் அங்கிருக்கப்
பெருங்கூட்டம் அவரை சூழ்ந்திருக்க
ஒவ்வொருவரும் பல கோரிக்கைகளை அவர் முன் வைக்க

உண்மையில் யார் இருக்கிறார்கள் சிறையில் ?
குழம்பிய வண்ணம் வெளியே வந்தேன்
என் நிலை உணர்ந்து சிரித்தார்
ஒரு “பெரியார்”.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s