
மற்றுமொரு புத்தாண்டு
மனமகிழ்ந்து கொண்டாடு
பிறர் உடனே அன்போடு
அதுதானே நம் பண்பாடு
ஆக்கப்பூர்வ சிந்தனைகள் பிறந்திடும்
அது செயல் வடிவில் முடிந்திடும்
உன் கனவெல்லாம் நிறைவேறும்
அது பலர் வாழ்வில் ஒளியேற்றும்
உன் துயர் எல்லாம் தூங்கிவிடும்
உன் நிலையது ஓங்கிவிடும்
தடைகள் எல்லாம் தளர்ந்து விடும்
உன் மனசக்தி உன்னை உயர்த்தி விடும்
வருவது மற்றுமொரு புத்தாண்டு அல்ல
சிறந்ததொரு ஆண்டு நீ வெல்ல
வாழ்த்துக்கள்.
Another New Year
It is very near
I swear, it will be your best year
And you will be in your top gear
Your worries will disappear
The”YOU”, you want to see will appear
So, keep moving ahead whatsoever
Best wishes for a Very happy New Year.