
படாதபாடு படுத்துகிறது வாழ்க்கை
மாற்றுவேன் அதன் போக்கை
அனுதினம் தேடுவேன் புது நம்பிக்கை
நிச்சயம் அடைவேன் என் இலக்கை
உழைப்பு இருந்தும் பல சமயம் இழப்பு
அத்தோல்விகள் தருகிறதே களைப்பு
அதனாலே வாழ்க்கையில் ஒரு சலிப்பு
இருந்தும் சொல்வேன் இதற்கெல்லாம்
நான் தான் பொறுப்பு
வழி தெரிந்தும் அதை முடக்கும்
சிலரின் சதி
மதி இருந்தும் வெல்கிறது
பல சமயம் விதி
சில சமயம் விடையில்லா
கேள்வியாக என் கதி
இருந்தும் நிச்சயம் தென்படும் என் விழியில் வெற்றிக்கான வழி
முடிவுவரை முயற்சி செய்வேன்
முயன்று முயன்று
இயலாமையைக் கொல்வேன்
திரும்பத் திரும்ப எனக்குள்
என்னால் முடியும் என்று சொல்வேன்
என் வாழ்க்கை என் கையில் என்று
உறுதியாக நம்பி அதை வெல்வேன்