
நெகிழிப் பை (பிளாஸ்டிக் பை)
தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்கும்
அதுவில்லா இடமில்லை
அதனாலே பூமிக்குத் தொல்லை
தினம் சேரும் குப்பையில் அது பாதி
அதனுள்ளே தான் பெரும் மீதி
உலக மலைகளை எல்லாம் அது ஏறிவிட்டது
ஓடும் நதிகளில் எல்லாம் அது மூழ்கிவிட்டது
கடல் மட்டத்தையும் தொட்டுவிட்டது
அரசுகள் போடும் தடைகளை எல்லாம் வென்று விட்டது
நெகிழிப் பைகளைக் கைவிடுவோம்
துணிப்பைகளைக் கையில் பிடிப்போம்
சுற்றுப்புறச் சூழலுக்கு நன்மை செய்வோம்
புவியின் வெப்பத்தைச் சற்று தனிப்போம்
மங்காத தமிழ் வேண்டும்
மங்கும் குப்பை வேண்டும்
மஞ்சப்பை நிறைய கண்டு
இயற்கையிடம் அன்பு கொண்டு
மகிழ்ச்சி கொள்வோம்.
மீண்டும் மஞ்சப்பை
பாதுகாப்போம் இயற்கையை