
மூன்று
மூன்று வாத்தைக் கண்டவுடன்
மூன்று எழுத்துகொண்ட
வார்த்தைகள் சில
என் நினைவை ஆட்கொள்ள
என் எழுத்தாணி எழுதியவை
உலகின் முதல் மொழி
பலர் போற்றும் செம்மொழி
என் தாய்மொழி
“தமிழ்”.
பல தம்பிமார்களை நம்பி
தமிழகத்தின் தலையெழுத்தை
மாற்றிய தங்கக் கம்பி
“அண்ணா”.
நடிகராக இருந்து
தமிழக முதல்வராக மலர்ந்து
சத்துணவு தந்து
மக்கள் மனதில் நின்று
மறைந்தும் வாழ்பவர்
“எம்ஜிஆர்”.
நாத்திகர் கண்ணதாசனை
ஆத்திகராக மாற்றிய மூன்றெழுத்து “கண்ணா”.
திரையில் அவர் நடந்தால் படை நடுங்கும்
அவர் வேகம் மின்னலும் தோற்கும்
பிஞ்சுக்கும் பிடிக்கும் அவர் பேசும் பஞ்ச்
“ரஜினி”.
இரக்கம் கொண்ட நெஞ்சம்
கருணையே அங்குதான் தஞ்சம்
அன்புக்கு இல்லை பஞ்சம்
உலகம் போற்றும் அன்னை
“தெரேசா”
அவர் கதைகள் ஒருவித அழகு
அதைப் படித்தால் விரியும் நம் சிறகு
அவ்வாறு எழுத ஆளில்லை அவருக்குப் பிறகு
“சுஜாதா”
பணமிருந்தும் பலனில்லை
பலர் இருந்தும் பிரயோஜனம் இல்லை
மற்ற எதுவும் ஒரு பொருட்டே இல்லை
ஒன்று மட்டும் இல்லை என்றால்
“மூச்சு”.