
படம் : திரு எஸ் அய்யாரப்பன்
காற்று அடித்தால் போதும்
படகு தானே மிதந்து போகும்
ஒரு துடுப்பு இருந்தால் போதும்
நம் இலக்கை நோக்கி அது செல்லும்
நாம் மூச்சு விட்டால் போதும்
காலம் தன்போக்கில் நம்மை நகர்த்திச் செல்லும்
நம் வாழ்வின் நோக்கம் புரிந்தால் போதும்
நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் நம்மை
அதை நோக்கித்துரத்திச் செல்லும்