
எல்லாம் சில காலம்
பிறகு எமலோகம்
ஒரு நொடி போதும்
எல்லாம் மாறும்
விதியின் தாளம்
அதற்கேற்ப நம்வாழ்க்கை நடனமாடும்
நாம் நினைப்பது ஒன்று
நடப்பது வேறொன்றாக இருக்கக்கூடும்
அதன் காரணம் புரியாமல்
பல சமயம் நாம் குழம்பக்கூடும்
நம் கையில் ஏதுமில்லை !
எல்லாம் கர்ம வினை என்றால்
நாம் என்ன செய்ய வேண்டும் ?
நல்லதை எண்ணி
முடிந்த அளவுக்கு
அதை முடித்தல் வேண்டும்
“எல்லாம் நம் கையில்”
இது பொய்யாக இருந்தாலும்
அது மெய் என்று நாம் உறுதியாக
நம்ப வேண்டும்
நம் விடாமுயற்சியைக் கண்டு
நம் மனவுறுதியைக் கண்டு
விதியே நம் இலக்கை நோக்கி
நம்மை நகர்த்த வேண்டும்
நம்பிக்கையே நம்மிடம்
தன்னம்பிக்கை கற்க வேண்டும்
முடிந்து போனது இறந்தகாலம்
வாழவேண்டியது நிகழ்காலம்
நாம் உருவாக்குவதே எதிர்காலம்
எல்லாம் சில காலம்
இருந்தும் அதை ஆக்குவோம்
திருவிழாக் கோலம்