
நிலவு அழகா ?
அவள் அழகா ?
என் சிறந்த படைவீரர்
இருவரிடம் நிலவை
பிடிக்கச் சொன்னேன்
பிடிபட்ட நிலவை
அருகில் சென்று நான் பார்த்தேன்
அவள் தான் அழகு என்று
நிலவே கூற
அகமகிழ்ந்து
படைவீரர்களுக்குப் பாட்டி சுட்ட வடையைச்
சடச்சுட பரிசளித்தேன்.
புவி திரும்பிய நான்
இவ்வுண்மையை பிறகவிஞர்களிடம் இருந்து மறைத்து விட்டேன்
அவர்கள் தொடர்ந்து நிலவைப் போற்றட்டும்
நான் மட்டும் அவளை போற்றுவேன்