
இரவுகள் எல்லாம் விடிந்தே தீரும்
கவலைகள் எல்லாம் கலைந்து போகும்
தடைகளெல்லாம் விலகி ஓடும்
மனச்சோர்வு நீங்கி ஊக்கம் பிறக்கும்
அதிர்ஷ்டம் வந்து உன் கதவைத்தட்டும்
பணம் வந்து உன் மடியில் கொட்டும்
நல்லாரோக்கியம் வந்து உன் கைகுலுக்கும்
நீ ஒன்று மட்டும் செய்தால் போதும்
உன் உள் மனது இதெல்லாம்
நடந்தே தீரும் என்று நம்ப வேண்டும்