
நீ மடிந்து ஆனது ஐந்தாண்டு
இலை உதிர்ந்து சூரியனும் உதித்தாயிற்று
உன் நினைவில் இன்றும் பலர் உண்டு
நீ இருந்தால்
இலையது உதிருமா?
சூரியன்தான் உதிக்குமா ?
என்று உன் பெருமை பேசுவதுண்டு
ஆண் ஆதிக்க உலகத்தில்
தைரிய பெண்ணாய் உருவெடுத்தாய்
அவர்களில் பலர் மண்டியிட, நீ கட்டளையிட்டாய்
சபதம் செய்தாய்
செய்து முடித்தாய்
முதல் அமைச்சராகச்
சட்டசபைக்குள் நுழைந்தாய்
சரித்திரம் படைத்தாய்
அஞ்சாத நெஞ்சமெல்லாம்
உன்னிடம் அஞ்சின
பயங்கர கேடிகள்
உன்னிடம் பயந்தனர்
இரும்புக்கை கொண்டு அடக்கினாய்
அன்பு கைக்கொண்டு அரவணைத்தாய்
பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டினாய்
உன் தன்நம்பிக்கையைப் பார்த்து” கை ” பயந்தது
அதனால் தலைநகரில் உன் கை உயர்ந்தது
தமிழகம் தலை நிமிர்ந்தது
நீ இன்று இல்லை
ஆனால் என்றும் இருப்பாய்
அம்மான்னா சும்மாவா ?