
இறந்த பின் என்ன ?
என்று நான் எண்ண
என் உள்மனசு சொன்ன
உண்மை தான் என்ன ?
உற்றார் விட்டுவிடுவார்
உறவினர்கள் மறந்து விடுவார்
குடும்பத்தார் கவலைப்படுவார்
நண்பர்கள் நினைத்துக் கொள்வார்
இவ்வுலகத்திற்கு வந்த ஒன்று சென்றது
எமலோகத்திற்கு மேலும் ஒன்று வந்தது
இந்தக் கணக்கோடு அது நின்றது
ஈட்டிய பொருள் எல்லாம் பொருள் இல்லாமல் போகும்
பணம் புகழ் பதவி விட்டுத் தூர ஓடிப்போகும்
ஆசை, கோபம், மோகம், பொறாமை
எல்லாம் அர்த்தமில்லாமல் போகும்
பெயர் கூட “பாடி “என்ன மாறிப்போகும்
உயிர்நாடி நின்றுபோகும்
மனமும் உடலும் செயலற்றுப் போகும்
போதும் போதும்
இப்ப என்ன செய்ய வேண்டும்?
பிறப்பு – இறப்பு
இதற்கிடையே சிறப்பாக வாழ்வது
நம் பொறுப்பு
மனிதம் கொண்ட மனிதனாக …..