
ஆண்டுகள் ஆயிரம் தாண்டி
இன்னும் நிலைத்து நிற்கிறது
நினைத்துப் பார்க்கையில் வியக்கவைக்கிறது
சிவன் உள்ளே சிவனேனு இருக்க
அவன் அவன் வந்து கண்டுகளிக்க
அன்று இருந்த சிவன் தான் இன்றும்
அன்றிருந்த வேறெவரும் இல்லை இன்று
இன்றுள்ளவர் அனைவரும் செத்துமடிவர்
நாளை மற்றும் பலர் வந்து மறைவர்
சிவன் மட்டும் உள்ளே சிவனேனு இருப்பார்
சிவனேனு இருந்தால்
சிவன் போல் ஆகலாமா?
என்றும் வாழலாமா?