
உன்னோடு நீ இருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்
உனக்குள்ளே நீ சென்று
உன்னைத் தேட வேண்டும்
உனக்கு வெளியே நீ நின்று
வெறும் சாட்சியாக
உன்னைப் பார்க்க வேண்டும்
உனக்குள்ளே உதிக்கும்
உன் எண்ணங்களை
நீ பகுத்தறிய வேண்டும்
உன் எண்ணம் போல் உன் வாழ்வு
இதை நீ அறிந்தால்
இல்லை உனக்குத் தாழ்வு