
மழைக்காக
விடுமுறை எடுத்து
மறுமுறை வந்தான்
மேகத்திரை விலக்கி
வெளியே நின்றான்
இருளை கலைத்து
வெளிச்சம் தந்தான்
குளிரைப் போக்கி
வெப்பம் தந்தான்
என் தூக்கம் கலைத்து
ஊக்கம் தந்தான்
கிழக்கே உதித்து
மேற்கே மறைந்தான்
அதைப் பார்த்த எனக்கு
இந்த பாடம் சொன்னான்
உச்சிக்குச் சென்றாலும்
மறைந்தாக வேண்டும்
அதற்குள் பிறருக்கு
வெளிச்சம் தந்து விடு
.