
இலை உதிர்ந்த மரம்
நிறம் மாறிய வானம்
இந்நிலை மாறும் தன்மை
அதுதானே உண்மை
இயந்திரம் போல் வாழ்க்கை எதுக்கு ?
எதுவும் நிரந்தரம் இல்லாத போது
மந்திரம் ஒன்று சொல்வேன்
இதில் தந்திரம் ஏதும் இல்லை
பயம், கவலை – நீக்கி
ஒவ்வொரு கணமும்
உற்சாகமாக வாழ்ந்தால்
இந்நிலை மாறும் உலகில்
உன் நிலை, தானே உயரும்
துயரங்கள் கரையும்
இதுவும் கடந்து போகும்
ஆனால் மிதந்து போகும்
மகிழ்ச்சி அலையிலே!