
Go to the beach.
Wet your feet.
It’s joy, nothing to beat.
When waves touch your feet
It’s nature that greets.
The experience is so sweet.
That you can go back and tweet.
Go to the beach.
Wet your feet.
It’s joy, nothing to beat.
When waves touch your feet
It’s nature that greets.
The experience is so sweet.
That you can go back and tweet.
அலை அலையாய் வந்து வங்கக்கடல் கரையை முத்தமிடும் இடம்
பல்லவ மன்னர்கள் பலர் கால்பட்ட தடம்
அங்கு கல் பாறை ஒன்று
சிற்பக் கலை வல்லுநர்கள்
கைப்பட்டு அன்று
வெகு நூறு ஆண்டுகள் கழித்து
இன்றும் நிற்கிறது குகையாக நன்று
சிற்பியின் உளி பட்டு
குகை சுற்றி கல் பல புலியானது
ஓர் குகை காக்க இத்தனை புலியா ?
யார் இருந்தார் இதனுள்ளே ?
வல்லவனுக்கு வல்லவன் மாமல்லன்
பெரும் பகைகளை முறியடித்துப்
பல இடம் சென்று போர் புரிந்து
தன் வெற்றிக்கொடி நாட்ட
அச்சமயம் அவன் அவள்
புலிகள் காக்க
இருந்த குகையா ?
இயற்கையின் ஒளிவட்டம் மேல் இருக்க
எடிசனின் கண்டுபிடிப்பு பிரகாசிக்க
இரவுடன் இருள் வந்து சூழ்ந்திருக்க
மண் மிதித்து மேலே பார்க்கிறேன்
இந்தியக் கொடி பறக்கிறது
பலர் சிந்திய ரத்தம்
என் நினைவில் கலக்கிறது
பெற்ற சுதந்திரத்தின் விலை என்னவென்று புரிகிறது
நீ நாட்டுக்கு என்ன செய்தாய்?
என்று உள்மனம் கேட்கிறது
Black and white
Brown in between
It is a race.
They all run at a great pace.
Some winning and some losing
But they all keep running.
It is a mad-life race.
All will slow down.
And it will end.
But they keep running.
Without knowing when it ends
அண்ணன் தங்கை பாசம்
படம் முழுக்க பேசும்
உண்மையா ? நியாயமா ?
அநீதியை எதிர்க்க
அண்ணன் பாசம் போதுமா ?
இதைத்தான் கதை கதைக்கிறது
படம் பார்க்கப் பார்க்க இனிக்கிறது
இது ரஜினி படம் என்று
மார்தட்டிக் செல்லலாம் நின்று
அவரின் விறுவிறுப்பு சுறுசுறுப்பு
படம் முழுக்க பார்க்கலாம் நாம் ரசித்து
காளியனைப் பார்த்தபோது
ரஜினியின் வயது அது மறந்து போச்சு
காளியனின் காளியாட்டம்
திரையில் பார்க்கப் பார்க்கக் கொண்டாட்டம்
அந்தப் பாட்டு – சாரல் சாரல்
வெகு காலம் காத்திருந்து வந்த
மழைத் தூரல் தூரல்
பாசக்கார அண்ணனாகக்
கிராமத்து வீரத்தின் சின்னமாக
மோசக்கார வில்லன்களைப்
புரட்டிப்போடும் மன்னனாக
ரஜினி நடித்த
இந்தப் படத்தைப் பற்றி
பலர் பலவிதமாகச் சொன்னாலும்
ஒன்று மட்டும் நிச்சயம்
அண்ணாந்து பார்க்கலாம்
குடும்பத்தோடு அண்ணாத்த
Life……
Sometimes
Our views are aligned.
Sometimes
It differs.
But all the time
We are together.
நான் பல் துவக்கும் நேரம் பகலவன் எழுந்தான் அவனை என் கண் கண்டபோது புத்துணர்ச்சி தந்தான் யார் என்ன சொன்னால் என்ன ? காலை எழுவதும் பின் மாலை மறைவதும் தன்னியல்பாகக் கொண்டான் பகலினை செய்தான் இவ்வுலகிற்கே சுடரொளியைத் தந்தான். அவன்போல் பிரகாசிக்க வேண்டும் மறைந்தால் இவ்வுலகமே அதை உணர வேண்டும். பலனேதும் கருதாமல் பிறருக்குப் பல நன்மை செய்ய வேண்டும்.
புயல் கடந்தது
மழை நின்றது
பொழுது சாய்ந்தது
இருள் சூழ்ந்தது
மழைநீர் தேங்கி நின்றது
தவளை மகிழ்ச்சி கொண்டது
தொடர்ந்து சத்தம் செய்தது.
இரவு நேரம் நகர்ந்தது
சத்தம் நின்றது
அமைதி வந்தது
எனக்குத் தூக்கம் தந்தது
கனவு வந்தது
அதில் வெயில் காய்ந்தது
என் தூக்கம் கலைந்தது
கண்விழிக்கக் குளிர் காற்று வீச
இரவு இன்னும் பாக்கி இருக்க
என் தூக்கம் தொடர்ந்தது.
Forget the numbers da
Pick your umbrella.
Step out, it’s a rainy day.
It doesn’t come every day.
Enjoy the cool breeze.
An opportunity to seize
Get set
to get wet
Never mind, it’s Thursday.
You can name it as Sunday
Sun is hiding behind
But it’s not unkind
Enjoy being in the present
No doubt it’s the best present
Its a rainy rainy day
I showed you a way to enjoy today
ஓயாமல் மழை பெய்ய
ஏரி விளிம்புவரை நிரம்ப
வெளியேறுகிறது உபரி நீர்
ஏன் இந்த வேகம் ?
அதன் கடல் தேடும் மோகம்
தருகிறதே எனக்குச் சோகம்
என் குடிநீர் கடலாகும் கோலம்