
என் தூரத்து உறவு
நான் தினம் பார்க்கும் நிலவு
இரவில் தான் வருவாள்
அமைதியை இரவல் தருவாள்
ஊர் உறங்கிய பின்னும்
எங்கள் சந்திப்பு தொடரும்
வெறும் பார்வையினாலே
பல கருத்துக்கள் பரிமாறும்
சொல் எதுவும் வேண்டாம்
மௌனமொழி அது போதும்
மறைந்தாலும் வருவாள்
தினம் தினம் புது நம்பிக்கை தருவாள்
அவள் வந்தால் போதும்
என் கவலைகள் எல்லாம்
செலவாக்கிப்போகும்.