
அலை அலையாய் வந்து வங்கக்கடல் கரையை முத்தமிடும் இடம்
பல்லவ மன்னர்கள் பலர் கால்பட்ட தடம்
அங்கு கல் பாறை ஒன்று
சிற்பக் கலை வல்லுநர்கள்
கைப்பட்டு அன்று
வெகு நூறு ஆண்டுகள் கழித்து
இன்றும் நிற்கிறது குகையாக நன்று
சிற்பியின் உளி பட்டு
குகை சுற்றி கல் பல புலியானது
ஓர் குகை காக்க இத்தனை புலியா ?
யார் இருந்தார் இதனுள்ளே ?
வல்லவனுக்கு வல்லவன் மாமல்லன்
பெரும் பகைகளை முறியடித்துப்
பல இடம் சென்று போர் புரிந்து
தன் வெற்றிக்கொடி நாட்ட
அச்சமயம் அவன் அவள்
புலிகள் காக்க
இருந்த குகையா ?