
இயற்கையின் ஒளிவட்டம் மேல் இருக்க
எடிசனின் கண்டுபிடிப்பு பிரகாசிக்க
இரவுடன் இருள் வந்து சூழ்ந்திருக்க
மண் மிதித்து மேலே பார்க்கிறேன்
இந்தியக் கொடி பறக்கிறது
பலர் சிந்திய ரத்தம்
என் நினைவில் கலக்கிறது
பெற்ற சுதந்திரத்தின் விலை என்னவென்று புரிகிறது
நீ நாட்டுக்கு என்ன செய்தாய்?
என்று உள்மனம் கேட்கிறது