
அண்ணன் தங்கை பாசம்
படம் முழுக்க பேசும்
உண்மையா ? நியாயமா ?
அநீதியை எதிர்க்க
அண்ணன் பாசம் போதுமா ?
இதைத்தான் கதை கதைக்கிறது
படம் பார்க்கப் பார்க்க இனிக்கிறது
இது ரஜினி படம் என்று
மார்தட்டிக் செல்லலாம் நின்று
அவரின் விறுவிறுப்பு சுறுசுறுப்பு
படம் முழுக்க பார்க்கலாம் நாம் ரசித்து
காளியனைப் பார்த்தபோது
ரஜினியின் வயது அது மறந்து போச்சு
காளியனின் காளியாட்டம்
திரையில் பார்க்கப் பார்க்கக் கொண்டாட்டம்
அந்தப் பாட்டு – சாரல் சாரல்
வெகு காலம் காத்திருந்து வந்த
மழைத் தூரல் தூரல்
பாசக்கார அண்ணனாகக்
கிராமத்து வீரத்தின் சின்னமாக
மோசக்கார வில்லன்களைப்
புரட்டிப்போடும் மன்னனாக
ரஜினி நடித்த
இந்தப் படத்தைப் பற்றி
பலர் பலவிதமாகச் சொன்னாலும்
ஒன்று மட்டும் நிச்சயம்
அண்ணாந்து பார்க்கலாம்
குடும்பத்தோடு அண்ணாத்த