
புயல் கடந்தது
மழை நின்றது
பொழுது சாய்ந்தது
இருள் சூழ்ந்தது
மழைநீர் தேங்கி நின்றது
தவளை மகிழ்ச்சி கொண்டது
தொடர்ந்து சத்தம் செய்தது.
இரவு நேரம் நகர்ந்தது
சத்தம் நின்றது
அமைதி வந்தது
எனக்குத் தூக்கம் தந்தது
கனவு வந்தது
அதில் வெயில் காய்ந்தது
என் தூக்கம் கலைந்தது
கண்விழிக்கக் குளிர் காற்று வீச
இரவு இன்னும் பாக்கி இருக்க
என் தூக்கம் தொடர்ந்தது.