
தெருவெங்கும் புகை மூட்டம்
ஆங்காங்கே வெடிச் சத்தம்
சரவெடிகள் சிதறுதைய்யா
அணுக் குண்டுகளும் வெடிக்குத் தையா
அழகான ஒளிக் கீற்றுகள்
வானம்வரை செல்லுதையா
தீபாவளித் திருநாளாம்
கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த நாளாம்
ராமன் அயோத்திக்குத் திரும்பி வந்த நாளாம்
அதர்மத்தில்” அ” மறைந்த நாளாம்
மக்களெல்லாம் கொண்டாடி
மகிழ்வுற்று இருக்கையிலே
எனக்குள்ளே ஒரு கேள்வி
ஒளி அது இருள் நீக்கும் இது சரி
ஓயாத வெடிச் சத்தம்
அமைதியல்லவா குலைக்கிறது?
பெரும் அமைதி பெரும் மகிழ்ச்சி
அல்லது நல்ல இசை சத்தம் தரும்
அது மகிழ்ச்சி
வெடி வெடிக்க மெல்லிசை வர வேண்டும்
இளையராஜா பாட்டுடனே அது வர வேண்டும்.
சிவகாசி காதில் இது விழ வேண்டும்
மெல்லிசையுடனே வெடி வேண்டும்