
கடல் சூழ்ந்த இவ்வுலகில்
உடலெனும் வாகனத்தை
உயிர் என்னும் எரிசக்தி
இயக்கவும் நிறுத்தவும்
எப்போது அது நிறுத்தும் ?
எவ்வளவு தூரம் அது நகர்த்தும் ?
யார் அறிவார்?
நகரும் வரை நகரட்டும்
பயணத்தை ரசித்துவிடு
நிற்கும்போது நிற்கட்டும்
அதற்குள்ளே உன் தடயத்தைப் பதித்துவிடு