உண்மை கசக்கிறதுபொய் இனிக்கிறது

உண்மைக்கும் பொய்மைக்கும்
தினம் என்னுள்ளே ஆயிரம் போர்
என் நம்பிக்கைகளே அதற்குப் பலம் 
சேர்க்கும் சோறு

உள்ளதை உள்ளபடி பார்க்கிறேனா ?
அல்லது என் நம்பிக்கைகளுக்கு 
ஏற்றவாறு அதை மாற்றுகிறேனா ?

எங்கிருந்து வருகிறது 
என் நம்பிக்கைகள் ?
பிறர் கூற வருகிறதா ?
என் மதம் தான் தருகிறதா ?
படிக்கும் புத்தகத்தால் வளர்கிறதா ?

என் நம்பிக்கைகளைப் பகுத்தறிய வேண்டும்
அதன் வேர்கள் எங்கேயென்று நான் 
உணர வேண்டும்

உண்மை கசக்கிறது
பொய் இனிக்கிறது
நான் வாழ நிறைய பொய் தேவை
அதனாலே உண்மையைத் 
தேடும் என் பயணம்
பொய் என்னும் வாகனத்திலே !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s