
ஆதவன் தினம் உதித்து
பின் மறைவதும்.
கடல் அலைகள்
ஓயாமல் எழுவதும்
பின் வீழ்வதும்
தினம் காலைத் தன் கூடவிட்டுச்
செல்லும் பறவை
மாலைவரை இரைதேடுவதும்
சலிப்பே இல்லாத உழைப்பு
இதைக் கண்டுணர்ந்தபோது
செய்ததையே திரும்பத்
திரும்பச் செய்வதில்
எனக்கு இருந்த சலிப்பு
தடம் தெரியாமல் மறைந்தது வியப்பு
நன்கு புரிந்தது உழைப்பின் சிறப்பு