
நடப்பதெல்லாம் நன்மைக்கே
நடந்தால் அனைத்தும் கடந்து போகுமே
பின்னோக்கி பார் தவறில்லை
ஆனால் முன்னோக்கி நட
ஒரு முடிவு தான்
மற்றொன்றின் ஆரம்பம்
ஒரு கதவு சாத்தினால் என்ன?
பல கதவுகள் உண்டு இவ்வுலகில்
கடந்த காலம் எதிர் காலத்தை நிர்ணயிப்பதில்லை
உன் எதிர்காலம்
அது இன்னும் உன் கையில்
இந்நொடி முடிவு செய்
அதற்காகத் தொடர் முயற்சி செய்
வேண்டியதைக் கேள் இயற்கையிடம்
பத்தில் எட்டு வந்து சேரும் உன்னிடம்
உன்னை நீ எதிர்க்காதே
எப்பொழுதும் தன்னம்பிக்கையை இழக்காதே
மனம் தளர்ந்து நிற்காதே
வாழ்க்கை எது முன்னோக்கிய பயணம்
பின்னடைவுகள் வந்தாலும்
பின்னோக்கிய தல்ல
நடப்பதெல்லாம் நன்மைக்கே
என்றும் நடப்பதை நிறுத்தாதே