
மேலிருந்து மழைத்துளிகள்
கீழ் வந்தபோது
அகம் மகிழ்ந்து அதை வரவேற்றாள் மாது
தரை தொடும் முன்னே சில துளிகள்
பாவையைத் தொட்டு,
அவள்மேல் பட்டு
அது மகிழ்ந்து
பின் பூமியிலே விழுந்து
கடல் நாடி
உயிர்பெற்று ஓட
சிறு தொலைவில்
குடைக்குள்ளே நான் நின்று
அதைக்கண்டு வியந்து
என்னை மறந்து போது
நான் உணர்ந்தேன்
மழை நீரின்றி அமையாது உலகு
பெண்ணின்றி இவ்வுலகில் வேறேது அழகு ?