
வந்துபோகும் இவ்வுலகில்
வருவதைக் கண்டு மயங்காதே!
போவதைக் கண்டு கலங்காதே!
வருவதும் போவதும் உன் கர்மவினை
அது உன் விதி
நிர்ணயிக்கிறது அது உன் வழி என்பார்
இது என்ன நியாயம் ?
நாம் அறியா நம் முற்பிறவி
அதனால் எப்படி இப்பிறவி ?
இது என் கேள்வி
விடைகாண என்னுள் நடந்தேன்
என் மனதை அடைந்தேன்
அசையாமல் நின்றேன்
வந்து போனது பல எண்ணங்கள்
ஆழமாய் சிந்தித்தேன்
விடையைச் சந்தித்தேன்
அவ்விடை இதுதான்
சமநிலையில் நம் மனம் நின்று
நம் எண்ணங்களை நாம் வென்று
வருவதையும் போவதையும்
சமமாக நாம் கண்டால்
பிறகென்ன
வருவதைக் கண்டு மயங்கமாட்டோம்
போவதைக் கண்டு கலங்க மாட்டோம்