
தினம் ஒரு புத்தகம் படிக்க வேண்டும்
கையில் எடுத்தவுடன் அதை முடிக்க வேண்டும்
படித்த அனைத்தும் புரிய வேண்டும்
புரிந்த அனைத்தையும் பகுத்தறிய வேண்டும்
.
பகுத்தறிந்ததைச் செயல்படுத்த வேண்டும்
செயலின் அனுபவத்தை உள்வாங்க வேண்டும்
பெற்ற அனுபவத்தைப் பிறருடன் பகிர வேண்டும்
வாசிப்பின் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்த வேண்டும்
அவர்களின் அனுபவங்களும் புது புத்தகமாக வர வேண்டும்
அவை அனைத்தும் நான் படித்து
புத்தம் புது உலகைக் காண வேண்டும்