அவன் உடல் ஓய்வு கேட்டது, அவனைத் தூங்கச் சொல்லியது, ஆனால் இரவு மணி 12 ஆகியும் அவன் தன் கைப்பேசியுடன் கைகோர்த்துக் கொண்டு இருந்தான்.
அவனுக்குத்தான் உலகமெங்கும் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்களே பேஸ்புக்கில். எந்நேரமும் அவர்களில் எவனோ ஒருவன் இணையத்தில் இருந்துக் கொண்டே தான் இருப்பான்.
தூக்கம் அவனை ஆட்கொள்ள ஆரம்பிக்க அவனை அறியாமல் அவன் கண் மூடிய நேரம் அந்தக் கைப்பேசியிலிருந்து ஒரு அழைப்பு ஒலிக்கத் திடுக்கிட்டுக் கண் விழித்தான்.
மறுமுனையில் அவன் நெருங்கிய நண்பனின் மனைவி அமலா.
” இவள் ஏன் இந்நேரத்தில் ?” என்று சற்று யோசித்தான். பல எண்ணங்கள் அவன் மனதில் ஓடத் தயக்கத்துடன் அவன் அந்த அழைப்பை ஏற்க மறுமுனையிலிருந்து ஒரு சில வார்த்தைகள் தான் பிறகு அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அவன் தூக்கம் கலைந்தது. அமலா சொன்னதைப் பற்றி வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தான்.
பிறகு ஒரு முடிவுக்கு வந்து, தனக்கு தானே சொல்லிக்கொண்டான் ” இதில் என்ன இருக்கிறது யோசிப்பதற்கு? அவள் ஒரு கேள்வி கேட்டாள், நான் பதில் கூறினேன் அவ்வளவுதான் “.
அவனுக்கு ஒரு தெளிவு கிடைக்க மறுபடியும் தன் படுக்கையில் படுத்து உறங்கிவிட்டான்.
சரி அப்படி என்னதான் அமலா சொன்னாள்
இரண்டே வரிகள் தான்
” நீ இன்னும் தூங்கலையா ?” என்று அவள் கேட்க
“ஆம்” என்று இவன் கூற
“அப்பச் சரி குட்நைட்” என்று அவள் முடித்தாள்
அவ்வளவு தாங்க.