
வாழ்க்கை
அடியெடுத்து வை
பல பல அடிகள் விழும் கலங்காதே
அடியெடுத்து வை
பல தடைகள் வரும் வருந்தாதே
அடியெடுத்து வை
நீ விழக்கூடும்
பிறர் உன்னை மிதிக்கக்கூடும்
உன்மீது உனக்கு இருக்கும் மதிப்பைச் சிறிதும் குறைத்து விடாதே
அடியெடுத்து வை
பல பயணம் தடைப் படும்
நடுநடுவே இடிபடும்
நின்று விடாதே
அடியெடுத்து வைத்து
சில சமயம் நீ பின்னோக்கிப் போகக்கூடும்
பார்வையை நோக்கை மட்டும் எப்போதும் முன்னோக்கி வை
அடியெடுத்து வை
சில சமயம் உன் பிடியில் நீ இல்லாமல் இருக்கக்கூடும்
பயந்து விடாதே
அடியெடுத்து வை
நீ மண்ணோடு மண்ணாக ஆகும் வரை
வாழ்க்கை அது ஒரு முன்னோக்கிய பயணம்
எப்போதும் இருக்கட்டும் இதில் உன் கவனம்