
நேற்று மாலை உடற் பயிற்சி முடித்துக்
குளிர் நீரில் குளித்து
உணவைச் சுவைத்து
சற்றே அமர்ந்தேன்
தமிழகத்தின் நிதிநிலை குறித்த
வெள்ளை அறிக்கையைப் படித்தேன்
தமிழகத்தின் ஒவ்வொரு
குடும்பத்தின் மீதும்
சராசரி ரூபாய் 2,63,976 கடன்
இருப்பதாக அறிந்தேன்
துக்கம் தாக்கத் தூக்கம் வந்ததது
கண்ணயர்ந்தேன்
கனவு வந்தது
தமிழகத்தின் கடன் எல்லாம் கரைந்தது
திடீரென வானில் இடி இடிக்க
என் தூக்கம் கலைந்தது
கடன்பற்றிய துக்கம்
திரும்பவும் வந்தது
விடியலுக்காகக் காத்திருக்கிறேன்………