
நடுவே காலமென்னும் கோடு
பலர் வருவதுமாய்
சிலர் போவதுமாய்
பயணிக்க வாழ்க்கை என்னுமொரு ரோடு
காட்சி அனைத்தையும் கண்ட
அந்த உயர்ந்த மலை மட்டுமே சாட்சி
தனியே சென்று அதனிடம் கேட்டேன்
ராமன் ராவணனைக் கொன்றானா?
கிருஷ்ணன் வெண்ணெய்யை
திருடித்தின்றான ?
இதற்கும் அம்மலையே சாட்சி.